கிறுக்கல்கள்

மெல்லச் சிறகு விரிக்கும்
பறவை
தலையை உயர்த்திப்பார்க்கும்

படபடவெனப் பறந்துகொண்டே
தேன்சிட்டு இரை எடுக்கும்.

எதிர்வரும் எல்லாவற்றிடமும் அல்லாது
குறிப்பிட்டவற்றோடு மட்டுமே
எறும்புகள் மூக்கு முட்டிச் செல்லும்

தொட்டதும்
வரிசைக்கிரமமாகவே
தொட்டாச்சிணுங்கி தனை மூடும்

வீட்டுக்குள் நுழைந்த வெயில்
எந்த முனைப்பும் இன்றி
பிற இடங்களை நிழல்களாக்கும்

சட் சட் சட் சட் என்று துவங்கி
ஹோவென பேரிரைச்சலில்
மழை பொழியும்.

தேநீர் கோப்பையில் படரும் ஆவி
சுடரைப்போல் அசைந்தாடி
காற்றில் கரைந்து போகும்

யாரேனும் இருவர் அன்பின் மிகுதியில்
அழுது கொண்டிருந்தால்
ஏதோ ஞாபகத்தில்
கண்ணில் நீர் துளிர்க்கப் பார்க்கும்.

#நட்பு……….